ஸ்ரீ அன்னை

March 19, 2024
ஸ்ரீ அரவிந்தர்

வெள்ளை ரோஜாக்கள்

காலை களிப்பூட்டுகிறது. நண்பகல் பொன் போன்ற நல் அமைதி தருகிறது.மாலை இதமான இளைப்பாறுதல் வழங்குகிறது. இவை நாள் வழங்கும் நல்வரங்கள்.
March 18, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

‘பிறகு, பிறகு’ என்னும் சுபாவம் பிசகானது. எதையும் ‘நாளை, நாளை` என்று தள்ளிப் போடும் நம் அறியாமை நம்மை ஒரு பாழ்மாளிகைப் பகுதியில் தான் கொண்டு போய் தள்ளி விடும். – ஸ்ரீ அன்னை
March 17, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

எப்பொழுதும் அன்பின் ஸ்வரூபமாகவே இருந்து விடு. துன்பம் ஒரு போதும் உன்னைத் தீண்டாது. – ஸ்ரீ அன்னை
March 16, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

நம் ஒவ்வொருவர் ஆன்மாவும் வானுலக சுவர்க்கமும் ஒரே நேரத்தில் ஜனித்தவைகள். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நாம் தேவலோக தேவர்களுக்குச் சமமானவர்கள். – ஸ்ரீ அன்னை
March 15, 2024

வெள்ளை ரோஜாக்கள்

மனிதன் இறைவனின் இரண்டாவது பிரதி, நல்லதையும் அல்லாததையும் மாறி மாறி வழங்குவதில். – ஸ்ரீ அன்னை
March 14, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

ஜீவன் மண் தூசியிலும் ஒரு நிலையில் அளைகிறான். எப்படியாவது அற்புதத்தை எட்டி விடத் துடிக்கிறான். சடமோ ஆன்மாவோ ஆற்ற வேண்டுவதை அவன் அடையத் துடிக்கிறான். – ஸ்ரீ அன்னை
March 13, 2024

வெள்ளை ரோஜாக்கள்

நீ அமைதி அடை. அந்த அமைதியில் அன்னையைக் கண்டு உணர். – ஸ்ரீ அன்னை
March 12, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

பிறர் அகந்தையைக் கண்டு நீ அதிர்ச்சி அடைவது உன்னுள்ளே அகந்தை உணர்வு இருப்பதால்தான். – ஸ்ரீ அன்னை
March 11, 2024

வெள்ளை ரோஜாக்கள்

நான் வாழ்வின் செயல்களையும் யோகத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வாழ்வே யோகமாக மலர்கிறது, செயல்களை உணர்வு பூர்வமாக இறைவனுக்கு சமர்ப்பணமாக்கும் போது, அவனுக்கே அவைகளை அர்ப்பணமாக்கும் போது. – ஸ்ரீ அன்னை