துன்பம் நம் வலிமையை வளர்க்கும் உணவு. கொடுமை நம் குடலை விளக்கும் பெரும் பேறு. ஆக, துன்பமும் துயரமும் எப்போதும் நம் முன்னேற்றத்திற்குத் துணை போகின்றன. – ஸ்ரீ அன்னை
நீங்கள் உங்களை மேலும் மேலும் மானுட சக்தியிலிருந்து மாற்றி இறைச்சக்திக்குத் திறந்து வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஆற்றும் செயல்கள் மிகச் சிறந்து விளங்கி பூரணத்துவம் பெற்று விடுகின்றன. – ஸ்ரீ அன்னை
வாழ்வில் ‘வைராக்கியம்’ என்னும் தீவிரம் கடைப்பிடிக்கச் சுலபமானது. ஆனால் ‘சமதா’ என்னும் எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டு வகைப்படுத்திச் செல்லும் பாங்கு என்பது அவ்வளவு எளிதல்ல. – ஸ்ரீ அன்னை