ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை. அருள் எப்பொழுதும் செயல்படக் காத்திருக்கிறது .
ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் செயலை எதிர்க்கக்கூடாது . தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான்.
உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.
உன்னுடைய அழைப்பு உண்மையானதாக இருந்தால், அதாவது நீ உண்மையாகவே குணமடைய விரும்பினால், உன்னுடைய அழைப்பிற்கு பதில் கிடைக்கும்.
அருள் உன்னைக் குணப்படுத்தும்.
– ஸ்ரீ அன்னை