அனைத்தையும் ஆளும் சக்தியே,
வெற்றிக்கொள் பேராற்றலே, தூய்மையே,
அழகே, மகோன்னத அன்பே,
இந்த ஜீவன் தனது எல்லாப் பாகங்களிலும், இந்த உடல் தன் எல்லா அம்சங்களிலும் பயபக்தியோடு நின்னை அணுகி,
இந்தச் சித்திக்குப் பூரண ஆயத்தமுடன் இல்லாவிடினும், நினது வெளிப்பாட்டிற்கான இந்தக் கருவியை
முழுமையான, பணிவுள்ள சரணாகதியுடன் நினக்கு அர்ப்பணிக்க அனுமதி,
நாங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் அற்புதத்தை நீ ஒரு நாள் நிறைவேற்றி,
நினது உன்னத சோதியை பூரணமாக
வெளிப்படுத்துவாய் என்ற அமைதியான,
உறுதியான நிச்சயத்துடன் ஆழ்ந்த பரவசத்தோடு உன்னை இறைஞ்சுகின்றோம்.
பிரம்மாண்டம், அனந்தம், அற்புதம்_
நீ ஒருவனே உள்ளாய், எப்பொருளிலும்
பிறங்கொளி வீசிப்பொலிகின்றாய்,
நீ வெளிப்படும் நேரம் நெருங்கிவிட்டது.
.. இயற்கை முழுவதும் பயபக்தியோடு
கூடிய ஒரு முனைப்பில் உள்முகப்பட்டுள்ளது.
அவளுடைய ஆர்வங்கொண்ட
அழைப்பிற்கு நீ விடையளிக்கிறாய்!
-ஸ்ரீ அன்னை