சரணமும் ஒழுக்கமுறையும்
கேள்வி: சரணடைபவனுக்கு ஒழுக்கம் அல்லது பயிற்சி தேவையா? சரணடைபவன் ஒழுக்கமுறைகள் இல்லாமல் இருக்கமுடியாதா? சிலசமயங்களில் ஒழுக்க முறைகள் தடையாக இருப்பதில்லையா?
அன்னை: இருக்கலாம். ஆனால் நாம் ஒரு வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கம் என்பது, நமது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறையாகும். இது, நாம் சுயவிருப்பத்தோடு செய்யும் செயல்களிலிருந்து வேறுபட்டதாகும். நீ சரணப் பாதையைப் பின்பற்றும் போது, உன் சுயமுயற்சியைக் கைவிடுவது தேவைப் படுகிறது. ஆனால் அதற்காக, நீ செயல்களுக்கான சங்கற்பத்தையே முற்றிலும் துறக்கவேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக, உன் சங்கற்பத்தை தெய்விக சங்கற்பத்துக்கு அடிபணியச் செய்வதால் நீ விரைவில் சித்தியடைவது இயலும். அதுவும் ஒரு வகையான சரணமே ஆகும். நீ செய்ய வேண்டியது, ஒரு கல்லைப் போல் செயலற்றுப்போகும் சரணமல்ல, உன் சங்கற் பத்தை இறைவனின் கைகளில் ஒப்படைப்பதாகும்.
–