ஆன்மிக வாழ்வில் இறங்குதல்
ஒருவன் ராஜயோகம், ஹடயோகம் போன்ற சில பயிற்சிகளைப் பின்பற்றலாம், ஆனால் அவனுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ராஜயோகம் முக்கியமாக மனத்தின் கட்டுப்பாட்டுக்காகவும், ஹடயோகம் உடலின் கட்டுப்பாட்டுக்காகவும் பயிலப்படுகிறது. ஆனால் ஆன்மிக வாழ்வில் நுழைவதோ, கடலில் குதிப்பதைப் போல் முழுவதுமாக ஆழ்ந்து மூழ்குவதாகும். அப்படி இறங்குவதும்கூடப் பாதையின் முடிவல்ல, தொடக் கம்தான். ஏனென்றால் இதில் இறங்கியபின், இறைவனில் வாழ நீ கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி ஆன்மிக வாழ்வில் இறங்குவதை எப்படிச் செய்வது? “எனக்கு என்ன ஆகும்? நான் எங்கே போய் விழு வேன்?” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கா மல், நேரே குதிக்க வேண்டும். உன் மனத்தின் தயக் கம்தான் உன்னைத் தடுக்கிறது. உன்னை நீயே தடுத்துப் பிடிக்காதே, பிடியைத் தளர்த்திப் போகவிடு. நீ கடலில் குதிக்க விரும்பும் அதேசமயத்தில், “இங்கே ஒரு கல் இருக்குமோ? அங்கே ஒரு பாறை இருக்குமோ?” என்றெல்லாம் நினைத்துக்கொண்டே இருந்தால், ஒரு போதும் குதிக்கமாட்டாய்.
அன்னையுடன் உரையாடல் 1929-1931