உன்னைக் காத்துப் பேணவும் , உனது பாதையைத் தயாரிக்கவும் செய்யும் அளவிற்கு விழிப்புற்ற சைத்திய புருஷன் ( Psychic being) உன்னுள் இருந்தால் , அது உனக்கு உதவியாக இருப்பவைகளை உன்னிடம் கொண்டு வரும் – மனிதர்கள் , புத்தகங்கள் , சந்தர்ப்பங்கள் முதலியவைகளைக் கொண்டு வரும் .எல்லாவிதமான தற்செயல் இணைவுகளும் ஏற்படும்… ஏதோ உனக்கு நன்மை செய்ய விரும்பும் ஒரு இச்சா சக்தியே அவற்றைக் கூட்டுவிப்பதைப் போல் அவை வரும். சரியான முடிவுகள் எடுக்க , சரியான திசையில் செல்ல, உனக்குக் குறிப்பு காட்டும், உதவும், ஆதரவு தரும்.
– ஸ்ரீ அன்னை