கடவுளை வஞ்சித்தல்
உனது உள்ளத்தைக் கடவுளுக்கு ஒரு தரம் திறந்துவிட்டு கடவுளது சக்தியும் உன்னுள்ளே இறங்கிவர ஆரம்பித்த பிறகு, நீ உனது பழைய துாண்டுதல்களை வைத்துப் போஷிக்க முயன்றால் தொந்தரவுகளுக்கும் அபாயங்களுக்கும் நீயே வழி தேடிக் கொள்ளுவாய். நீ விழிப்புடனிருந்து, உனது இச்சைகளைத் திருப்தி செய்வதன்பொருட்டுக் கடவுளை ஒரு மறைப்பாக உபயோகித்துக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆயினும் தங்களைத் தாங்களே ஆசாரியர்கள் என அழைத்துக் கொ ளும் பலர் அதைத்தான் செய்கிறார்கள். நீ நேரான பாதை யிலிருந்து விலகும் போது, உனக்கு அதிக சக்தியில்லாமலும் உனது ஞானம் சொற்பமாயும் இருக்குமானால், நீ ஒரு ரகத்தைச் சேர்ந்த சில ஜீவர்களின் வலையில் சிக்கி அவர்கள் இஷ்டப்படி ஆடும் கருவியாகி, இறுதியில் அவர்களால் விழுங்கப்படுகிறாய். யோக மார்க்கத்தில் வேஷம்போட முயலுவது ஆபத்தாகும்; நீ கடவுளை ஏமாற்றமுடியாது. “நான் உன்னுடன் ஐக்கியப்பட விரும்புகிறேன்” என்று உதட்டில் உச்சரித்துக் கொண்டும் உள்ளுக்குள் “எனக்கு சக்திகளும் போகங்களும் வேண்டும்’ என விரும்பிக்கொண்டுமா நீ கடவுளிடம் செல்கிறாய்?
உஷார்! நீ நேராக செங்குத்தின் ஓரத்தை நோக்கிச் செல்லுகிருய்.
ஆயினும் இந்த பேராபத்தைத் தவிர்ப்பது வெகு சுலபமான காரியமாகும். நீ குழந்தையைப் போலாய்விடு ; அன்னையிடம் உன்னை ஒப்படைத்துவிடு; அவள் உன்னை எடுத்துச்செல்ல விடு. பிறகு உனக்கு அபாயமே கிடையாது.