கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது?
அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு இருக்கிறோம். இறைவன் புவியில் படிப்படியாக வெளிப்படவும், இறைவனின் ஆட்சி புவியில் நிலைபெறவும், அவனது சித்தத்திற்கு உரிய கருவியாக அமைவதற்காகவே நாம் இங்குள்ளோம். இறைவனது அழைப்புக்குப் பதிலளிக்கும் மனிதர் மட்டுமே அவனது அருளைப் பெறுவர்.
மனிதகுலம் முழுவதுமே, நேரடியாக இல்லாவிடி னும் மறைமுகமாகவாவது பயனடைவது, மனிதகு லத்தின் நிலையையே பொறுத்ததாகும். இப்போது உள்ள நிலைமையை ஆராய்வோமானால் அதிக நம்பிக்கைக்கு இடமில்லை.