(ஆன்மீக ஆசைகளில் இதுவும் ஒரு ஆசைதான்)
கேள்வி : தெய்வ அருள் செயல்பாடு குறித்து.
பதில்: ஒரு பொழுதும் தெய்வ சக்திகளை இழுக்க முயலாதீர்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசையினால், ஆத்மானுபூதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒரு பொழுதும் தெய்வத்தை உங்கள் பால் இழுக்க முயலாதீர்கள்.
இது முக்கியமான ஒன்றாகும்.தெய்வ சக்தியை உங்களை நோக்கி இழுக்க முயல்வது உங்களது அகங்காரத்தைக் குறிப்பதாகும்.
முற்றிலுமாக இறைசக்தி உங்களுள் நிரம்பும்படி உங்களைத் திறவுங்கள்.ஆனால் தெய்வத்தை இழுக்க முற்படவேண்டாம்.அது உங்கள் தகுதிக்கும், பற்றற்ற நிலைக்கும் ஏற்பத் தானே நிகழக் கூடியதாகும்.
உங்கள் ஏற்புத் திறனை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஆர்வமுறலாம். அர்ப்பணிக்கலாம். உங்களைத் திறக்கலாம். ஆனால் ஒரு பொழுதும்
எடுத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அனைவரும் இறைவனையே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தவறுகளுக்குப் பொறுப்பு தெய்வம் அன்று.
மனிதர்களின் பேராசை, தன்னலம், அஞ்ஞானம், பலவீனம், ஏற்பின்மை போன்றவையே.
– ஸ்ரீ அன்னை
1 Comment
Pranam Maa