செய்வதற்கு ஒன்றுமில்லாதபோது, நீ அமைதி இழந்து அங்குமிங்கும் அலைகிறாய், நண்பர்களைச் சந்திக்கிறாய், உலாவுகிறாய். மேலான விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். செய்யக்கூடாத காரியங்களைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக, ஆகாயம் அல்லது கடல் முன்பாக அல்லது மரங்களின் கீழ்…. எங்கு முடியுமோ அங்கு அமைதியாக அமர்ந்துகொண்டு …. இவற்றுள் எதாவது ஒன்றைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முயற்சி செய் :-
ஏன் வாழ்கிறாய் என்பதைப் புரிந்து கொள், எவ்வாறு வாழ வேண்டும் எனக் கற்றுக்கொள், நீ செய்ய விரும்புவது என்ன, அதற்கு என்ன செய்யப்பட வேண்டும், உன் வாழ்வில் இருக்கும் அறியாமையிலிருந்தும், பொய்மையிலிருந்தும், வலியிலிருந்தும் தப்பிக்க சிறந்த வழி எது என்பதையெல்லாம் எண்ணிப்பார்.
– ஸ்ரீ அன்னை