ஸ்ரீ அன்னை மானிடராக இருந்தார். ஆனால் இப்பொழுது தெய்வ அன்னையின் அவதாரமாக இருக்கிறார். அவருடைய “பிராத்தனைகள் “இந்த கருத்தை ஆதரிக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.
ஆனால் என்னுடைய அறிவிற்கு என்னுடைய சைத்திய புருஷனுக்கு அவர் தெய்வ அன்னை ,நம்மை மானிடர்களை ,வெற்றிகரமாக ஞானத்திற்கும் ,பேரின்பத்திற்கும் , ஆனந்தத்திற்கும் ,பரம் பொருளிடத்திற்கும் இட்டுச் செல்வதற்காக இருள் , துயரம் , அஞ்ஞானம் ஆகிய போர்வையைப் போர்த்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
ஆன்மீக பாதையில் தானே நடந்து மனிதருக்கு வழிகாட்டுவதற்காக இறைவன் மனிதனாகத் தோன்றுகிறான்.மனிதனுடைய புற இயற்கையை ஏற்றுக் கொள்கிறான்.
ஆனால் அப்போது இறைவனாக இல்லாது போய் விடுவதில்லை .
நடப்பது ஒரு வெளிப்பாடு. மனிதன் இறைவனாக மாறுவதன்று. குழந்தைப் பருவத்தில் கூட ஸ்ரீ அன்னை தன்னுள்ளே மனிதனுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார். ஆகவே பலர் கொண்டிருக்கும் கருத்து பிழையானது.
மேலும் ஸ்ரீ அன்னையின் பிராத்தனைகள் நமக்கு — ஆர்வமுறும் சைத்திய புருஷனுக்கு -இறைவனை நோக்கி எப்படிப் பிராத்திக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக இருக்கின்றன என்றும் நான் கருதுகிறேன்.
– ஸ்ரீ அரவிந்தர்