வாழ்வு மட்டும் இருந்து மரணம் இல்லையென்றால் அமரநிலை இருக்க முடியாது ;அன்பு மட்டும் இருந்து கொடுமை இல்லையென்றால் களிப்பு சப்பென்றும் கணநேரப் பரவசமாகவுமே இருக்கும்; பகுத்தறிவு மட்டும் இருந்து அஞ்ஞானம் இல்லையென்றால் நாம் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலை பகுத்தறிவுடைமைக்கும் உலகியல் ஞானத்திற்கும் மேலே செல்லாது .
உருமாற்றமடைந்த மரணம் அமர வாழ்வாக ஆகிறது.;உருமாற்றமடைந்த கொடுமை ஆனந்தப் பரவசமாகிய அன்பாக ஆகிறது;
உருமாற்றமடைந்த அஞ்ஞானம் உலகியல் ஞானத்திற்கும் அறிவிற்கும் அப்பால் பாய்ந்து செல்லும் ஒளியாக ஆகிறது.
– ஸ்ரீ அன்னை