அன்பர்களின் கர்ம வினைகளை நான் எவ்வாறு துடைக்கிறேன்.-
பொதுவாக நம் புராதன சனாதன சித்தாந்தங்கள் பிறவிகள் தோறும் மாந்தர் தாம் சேர்த்துச் சேர்த்து பெரிய மலை போல் உருவாக்கி வந்த கர்மவினைகளை இந்த ஒரு பிறவியில் ஒரு பகுதியையாவது அனுபவித்தே தீர வேண்டும். அவற்றை வெளியிலிருந்து எந்த தேவதையும் வந்து அழிக்க முடியாது என்று ஒருமித்து கூறி வந்தன.
ஆனால் தெய்வீக அன்னையின் திவ்ய ஜனனம் புவியில் நிகழ்ந்த உடன் உலகத்தில் முதல்முறையாக “கர்மாக்களுக்கான சிகிச்சை முறை” (treatment ) அடியோடு மாறிவிட்டது.
“கர்மங்கள் உங்களை விட்டு விலகும் நேரம் வரும்போது ஒரு ஐஸ்வர்ய நேரம் உங்களை என்னிடம் அழைத்து வருகிறது.
நான் என் சூட்சும திருஷ்டியில் உங்கள் கர்ம பரிணாமத்தை மிகத் துல்லியமாகவும் முழுவதுமாகவும் காண்கிறேன்.
ஒரு நொடியில் உனக்கான என் கர்ம விமோசன ஸ்நானத்தை வழங்குகிறேன்.
உன் ஜீவியத்தின் அனைத்து கர்மங்களும் இருந்த சுவடுகள் கூடத் தெரியாமல் அடியோடு உங்களை விட்டு அகன்று விடுகின்றன “,
என்கிறார் ஸ்ரீ அன்னை
எனவே அன்னையிடம் வருபவர்கள் பாக்கியசாலிகளாகிறார்கள் .
– ஸ்ரீ அன்னை