நான் இப்பூவுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவை:
1. முழுமையான, நிறைவான உணர்வு.
2. பரிபூரண அறிவு, அனைத்தையும் அறியும் வாலறிவு.
3. வெல்லவொண்ணா, தடுக்கவொண்ணா பேராற்றல், சர்வ வல்லமை.
4. நிலையான புத்துயிர் பெற்ற, அசைக்கமுடியாத, திடமான நல்ல ஆரோக்கியம்.
5. சாசுவதமான இளமை, இடையறா வளர்ச்சி, இடையூறு இல்லா முன்னேற்றம்.
6. முழுமையான அழகு, தொகுதியான, மொத்தமான இசைவு.
7. அழியாத, இணையற்ற ஐஸ்வர்யம், இந்த உலகத்து செல்வத்தை எல்லாம் கட்டியாளும் திறமை.
8. நோய் தீர்க்கும் வல்லமை, அனைவருக்கும் இன்பமளிக்கவல்ல தன்மை.
9. எல்லா வகை விபத்துகளிலிருந்தும் காத்துக் கொள்ளும் தன்மை, அனைத்து எதிர் சக்திகளின் தாக்குதல்களுக்கும் ஆளாகாத திண்மை.
10. எல்லாத் துறைகளிலும் எல்லா நடவடிக்கைகளிலும் தன்னை நன்கு புரியவைக்கும் திறமை.
11. நாவன்மை, எல்லோராலும் நன்கு புரிந்து கொள்ளப்படும் திறமை.
12. மற்றும் உனது பணியை நிறைவேற்றுவதற்கான அனைத்தும் வேண்டும்.
– ஸ்ரீ அன்னை