கருணையும் இறை அன்பும்
பின்பு இறைவனது கருணையின் உண்மையான அன்பு தோன்றுகிறது. அனைத்து உயிர்களின் மீதும் ஏன் அனைத்துப் பொருட்களின் மீதும் கூட அது பதிந்திருக்கிறது. அதீதமான. அபத்தமான துயரங்களும் இக்கருணை காரணமாக அதன் மீது நமக்கு ஏற்படும் ஈர்ப்பினாலும் அதன் இனிமையினாலும் விலகி விடுகிறது. அது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அன்பின் தோற்றத்திலேயே அதைக் கருணையாக உருவெடுக்கச் செய்யும் ஏதோவொன்று உள்ளது; ஓர் ஆற்றல், இனிமைத்தன்மை, எங்கும் பரவும் இதம், இந்த இதம் ஏற்படுத்தும் அதிர்வுகள், இதை ஒளிபெற்ற உணர்வு நிலையின் மூலமாக சில விஷயங்களின் மீது குவிக்கமுடியும். இங்குதான் குவிக்கப்பட்ட சிந்தனையின் பயன்பாடு வெளிப்படுவதை நான் பார்க்கிறேன்; சிந்தனை இந்த அதிர்வுகளைத் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு ஒரு ஊடகம் போன்று செயல்படுகிறது. இந்த ஆற்றல், இனிய அதிர்வு உலகின் மேலாக நிலைபெற்றுள்ளது. தன்னைப் பெற்றுக் கொள்பவர்களுக்காகக் காத்திருக்கிறது. இது விருப்பு வெறுப்பிற்கப்பாற்பட்ட தொரு செயல். சிந்தனை – ஒளிபொருந்திய, அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கருவியாக மாத்திரமே செயல்படும், உயர் உணர்வு நிலையால் இயக்கப்படுவதில் திருப்தியுறும் சிந்தனை – இந்த விருப்பு வெறுப்பற்ற ஆற்றலோடு தேவையான இடங்களில், தருணங்களில் தொடர்பை உருவாக்கும். உறவை உருவாக்கும் தொடர்பாளராக மாத்திரமே செயல்படுவது
– ஸ்ரீ அன்னை