அகத்தே மறைந்திருக்கும் அறிவின் மங்கலான, அடிக்கடி உருக்குலைவுறும் பிரதிபலிப்பே இதயத் தின் நம்பிக்கையாகும். அடிக்கடி, வேரூன்றிய நாத்தி கனைவிட ஆத்திகன் ஐயத்தால் அதிகமாக அலைவுறுகின்றான்; ஆனால் அவன் தன் அடியு ணர்வில் உணரும் ஏதோ அறிவினால் தனது நம் பிக்கையைக் கைவிடாதிருக்கிறான். அந்த அறிவு அவனுடைய குருட்டுநம்பிக்கையையும் மங்கிய ஐயப் பாடுகளையும் பொறுத்துக்கொள்கிறது, தனக்குத் தெரிந்ததை அவன் மெய்க்காட்சியாகப் பெறக்கூடிய பாதையில் அது அவனைச் செலுத்துகின்றது.
– ஸ்ரீ அரவிந்தர்