இந்தப் பொழுதினில் இயங்கு நிகழ்வின் முன்னே நிகழ்நதது பின்னே நிற்கவும் அதன்முன் நிகழ்ந்தது அதன்பின் ஏகவும் நெடுகிலும் தொடர்ந்த நிகழ்வுத் தொடரின் நீள்வாற் பகுதியின் பக்கமே நெரிந்து விடாப்பிடி யுடனே வேண்டித் தொடர்ந்த நேரமாம் தாரை நின்றது பின்னே, இன்று நேரில் இல்லா(து) இருந்தும் நன்னர் நயத்தகும் உருவ வகைகள், மற்றும் நுண்ணயம் வாய்ந்த படிவுகள் ஆகிய பருப்பொருள் அனைத்தும் ஆங்கே இருந்துதான் அமைந்து வசித்த இடமாம் விளங்க இயலா வெள்ளப் பெருக்கின் கரையின் கண்ணே சான்றாய் நின்றது. காலக் கடவுள் காட்டிடும் காட்சியை அவளின் மெய்ம்மை மீட்டும் ஆய்ந்தே.
– ஸ்ரீ அரவிந்தர்