எவரும் அறியா எண்ணக் களங்களில் ஒதுங்கி நின்றே திரும்பிப் பார்க்கவும் பலவகை யாக நிழலுரு உற்றதோர் கடந்த கால நிகழ்வில் சிறுபொழு(து) அவளது சிந்தனை அசைய லானது, மறுபடி உயிர்த்தும் தன்னின் முடிவு நெருங்கி வருவதை நிகழ்வே கண்டது. அழியினும் அஃதோ அவளின் அகத்தே மடியா வண்ணம் வாழ்ந்தே இருந்தது, நிலையே இல்லா நிலையைக் கொண்டும் அந்த நிலையிலாக் கண்கள் உறாதும், மற்றவர் காணா வகையில் மறைந்தும் தன்னின் சாயலில் தன்விதி வசப்படும் ஆவியாய் அஃததன் புனைவுரு நெஞ்சில் எதிர்கா லத்தை ஏந்திக் கொண்டதே.
– ஸ்ரீ அரவிந்தர்