அதலத்(து) ஆட்சி நடைமுறை ஒழுங்கினைத் தண்டனை வகையாய்க் குன்றின் உச்சியில் அமல்செய்(து) அஃதும் அல்லல் படுத்தவே, தூயவான் உயர்வெளித் தூதர்தம் மேலே களிமண் அடித்தது கறைவிளைக் கின்றது, காத்திட வந்தராம் கருணையர் கைகளை இடறி விழுந்த இயலுல கத்தின் முட்களி னாலே தற்காப்(பு) அமைத்தும் தடுத்து வளைத்தும் திருப்பு கின்றது, சாவுடன் நோவுடன் தானும் சென்றே இறைவனின் புதல்வரை எதிர்கொள் கிறதே.
அதலம் = abysm = பள்ளம்
– ஸ்ரீ அரவிந்தர்