ஆங்கே அதனின் தடயந் தன்னில் தூயதோர் நீடவா சுணங்கி நின்றிட, இறப்பை மட்டுமே இலக்கெனக் கொண்ட இதயங்கள் கொஞ்சமும் எட்டிட இயலாப் பூரண சக்தியை, பொலிவுறு காட்சியைப் போற்றிப் புரிந்திடும் பூசனை இன்னமும் நடத்தப் படாதே நாழிகை கடந்தது, பிறவி ஒன்று பெருமையாய் அருமையாய் உதிக்கும் என்கிற முன்னுணர்(வு) ஒன்றோ தயங்கித் தவித்துக் கொண்டிருந் ததுவே.”
– ஸ்ரீ அரவிந்தர்