இங்கும் இதுபோல் நிகழுமோ என்றே
வியக்கும் வண்ணம் விளைவ(து) உணர்த்தும் பொன்னொளிக் கற்றையும் பொலிவுறு காட்சியும் அறிவொளி ஏற்றி ஆற்றுப் படுத்தவே, சுருத்தெலாம் அழிந்த, கடைத்தரப் பண்புடை உருவுகள் கூட அருநிகழ்(வு) எய்தின. ஆன்மிக எழுச்சி அதன்பின்னர்த் தேய்ந்து மாளும் தன்மையாம் மனித இலக்கினில் நாட்டம் இன்றி, நயத்தல் இன்றி, மங்கி, விலகி, மறைய லானது.
– ஸ்ரீ அரவிந்தர்