தெளிவிலா நிலனின் பேச்சிலா நெஞ்சிலே அமைந்த நீர்ச்சுழல் அருகே நம்மின் அரையொளி ஏற்றிய அறியாத் தன்மை வலமாய் உலவி வருவதிவ் விடமே, எதிருன வைப்படி எவணோ என்றே அறியா நிலையாம் ஐயப் பாட்டின் நிழலில் நிறுவிய அரியணை அமர்ந்து மெய்ம்மைத் தேவி வீற்பதிவ் விடமே, கடுந்துயர் தருவதோ(டு) உறுதி அற்றதாம் கடுந்தொழிற் களமிதில் விருப்பு வெறுப்பிலா விழிதிறந்(து) ஊன்றி மிருதுவாய் நோக்கிட, நம்மின் இன்ப துன்ப நிலைக்கெலாம் நடுநிலைச் சான்று நயமாய் நின்றது, வணங்கிப் பணிந்த ஆங்கே எழுப்பொளிக் கதிரை ஏற்று மகிழ்ந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்