துர்க்கை அன்னையே!
யோக சக்தியை விரிவ டையச் செய். நாங்கள் உன் ஆரிய மைந்தர்கள். நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தி யையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்க ளுள் மீண்டும் மலரச் செய். இவை அனைத்தை யும் உலகுக்கு அளி. ஓ உலக அன்னையே, மானு டர்களுக்கு உதவத் தோற்றமளி. எல்லாக் கேடு களையும் நீக்கு.
– ஸ்ரீ அரவிந்தர்