துர்க்கை அன்னையே!
நீயே, காளி. மனிதத் தலைகளை மாலையாக அணிந்து, திக்குகளை ஆடையாகக் கொண்டு, கையில் வாளேந்தி அசு ரர்களை மாய்க்கிறாய். தேவீ, உன் இரக்கமற்ற முழக்கத்தால் எங்களுள் உறையும் எதிரிகளை யும் மாய்த்து விடு, அவர்கள் யாருமே அங்கு உயிரோடு இருக்க வேண்டாம். தாயே, நாங்கள் மாசுகள் நீங்கித் தூயவர்களாக ஆகவேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள். ஓ அன்னையே, உன்னை வெளிப்படுத்துவாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்