துர்க்கை அன்னையே!
அகத்தே உள்ள பகை வர்களை மாய்த்துவிடு. பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு. தாயே வலிமை வாய்ந்த தீரம்மிக்க மேன்மையான மக்கள் இந்தியாவின் புனிதமான காடுகளில், செழிப்பான வயல்களில், வானளாவும் மலைக் ளின் அடிவாரங்களில், பளிங்கு போன்ற ஆறு களின் கரைகளில் என்றென்றும் வசிக்க வேண் டும். அவர்கள் ஒற்றுமையிலும் அன்பிலும் உண்மையின் சக்தியிலும் கலை இலக்கியங்க ளிலும் வலுவான அறிவிலும் உயர்ந்து விளங்க வேண்டும். இதுவே உன் திருவடிகளில் நாங்கள் சமர்ப்பிக்கும் வேண்டுகோள். அன்னையே, உன்னை வெளிப்படுத்துவாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்