உன் யோக வலிமை யுடன் எங்கள் உடலுள் வந்தருள். நாங்கள் உன்னு டைய கருவிகளாக ஆவோம், தீமை யாவையும் அழித்துவிடும் உன் வாளாக ஆவோம். அறி யாமை அனைத்தையும் அகற்றிவிடும் உன் விளக்காக ஆவோம். உன் இளஞ் செல்வங்க ளின் இவ்வேட்கையை நிறைவுபெறச் செய். அன்னையே, எங்கள் தலைவியாக இருந்து எங் களை இயக்கு. உன் வாளைச் சுழற்றித் தீமையை அழி, உன் விளக்கை உயர்த்தி அறிவொளி பரப்பு. உன்னை வெளிப்படுத்து.
– ஸ்ரீ அரவிந்தர்