துர்க்கை அன்னையே!
அன்பும் அறிவும் வலிமையும் தருபவளே; உன்னுடைய சக்தி வடிவில் நீ பயங்கரமாகக் காட்சியளிக்கின்றாய். ஓ,உக்கிரமும் அழகும் உடைய அன்னையே, வாழ்க்கைப் போரில், இந்திய நாட்டுப் போரில் நாங்கள் உன்னால் ஏவப்பட்ட வீரர்கள். தாயே, எங்கள் உயிருக்கும் மனதுக்கும் அசுர சக்தியை யும், அசுர உழைப்பையும் தருவாயாக, எங்கள் உள்ளத்துக்கும் புத்திக்கும் தேவ இயல்பையும் தேவ அறிவையும் அளிப்பாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்