துர்க்கை அன்னையே!
யுகம் யுகமாக ஒவ் வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. அன்னையே. புவியில் தோன்றி எங்களுக்கு உதவுவாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்