எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பால், நம்முடைய ஜீவனின் அமைதியான ஆழங்களில், இடையறாது ஓர் ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது, அதுவே சைத்திய உணர்வின் ஒளி.
அந்த ஒளியைத் தேடிச்செல், அதன் மீது ஒரு முனைப்படு; அது உன்னுடன் உள்ளது, ஒரு விடா முயற்சியின் உறுதியால் நீ அதை நிச்சயம் காண்பாய்.
நீ அதற்குள் புகுந்த மாத்திரத்திலேயே, இறவாமை உணர்வுக்கு எழுவாய், எப்பொழுதும் வாழ்ந்திருப்பதாக
உணர்வாய், நீ எப்பொழுதும் வாழ்வாய்.
– ஶ்ரீ அன்னை