பெண்கள் காரணமாக வரும் சண்டைகளுக்கும் பொறாமைக்கும், பால் உணர்ச்சி சம்பந்தமல்லாத பிற கவர்ச்சிகளினால் வரும் சண்டைகளுக்கும் பொறா மைக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடு பார்க் கிறாய் என்பது எனக்கு விளங்கவில்லை. இரண்டும் ஒரே அடிப்படைத் தூண்டுதலிலிருந்துதான் எழுகின் றன, உடைமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என் னும் இயல்பூக்கத்திலிருந்து; சாதாரண பிராண அன் பின் அடியில் அதுதான் இருக்கிறது, பால் உணர்ச்சி சம்பந்தப்பட்ட பொறாமைக்கு இடமில்லாத சந்தர்ப் பங்களில் மனம் வேறு நோக்கங்களின் ஆதரவைத் தேடுகிறது, அவை அதற்கு முற்றிலும் நியாயமாகத் தோன்றும் தன்னைப் பிடித்துத் தள்ளுவது பிரா ணன்தான் என்பதை அது உணராமலிருக்கலாம், இருப் பினும் சண்டைகளும் காரசாரமான கருத்து வேறு பாடுகளும் இருக்கவே செய்யும். உன்னிடம் இந்த இரண்டு வகையான பொறாமைகளும் இருந்தனவா அல்லவா என்பது அதிக முக்கியமானதல்ல, அதுவிஷயங்களை நல்லதாக்கவோ கெட்டதாக்கவோ செய்து விடாது. அந்த இயல்பூக்கத்தையே விட்டொழிப்பதே முக்கியமானது, உளவியில் நோக்கிலானாலும் சரி, ஆன்மிக மாற்றத்தின் நோக்கிலானாலும் சரி.
– ஸ்ரீ அரவிந்தர்