நீ தியானம் செய்ய இயல்வதற்கு , முற்றிலும் அமைதியான மூலையில் அமர்ந்து யாரும் நடமாடாத மூலையில் , முற்றிலும் அசையாமல் உன்னதமான ஆசன நிலையில் அமர்ந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்ற தவற்றைச் செய்யாதே – இது உண்மையன்று .
எல்லாச் சூழ்நிலைகளிலும் தியானம் செய்வதில் வெற்றி காண்பதே தேவைப்படுகிறது , நான் கூறுவது
‘ தியானம் செய்தல் ‘ -. உன்னுடைய மூளையை வெறுமையாக்கிக் கொள்வதல்ல , ஆனால் இறைவனின் எண்ணத்திலேயே உன்னை ஒருமுனைப்படுதத்திக் கொள்வதாகும் . மேலும் இந்த எண்ணத்தை நீ உன்னுள்ளேயே வைத்திருந்தால் , நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் அதன் தரம் உயர் நிலைக்கு மாறும் – அதன் தோற்றத்தில் அல்ல . ஏனென்றால் வெளிப்படையாக அது ஒரே மாதிரியானதாக இருக்கும் . ஆனால் அதன் தரம் மாறுபடும் . மேலும் வாழ்க்கையும் தன்தரத்தை மாற்றிக் கொள்ளும் . நீயும் முன்பிருந்ததைவிட ஒருவகையில் சற்று வேறுபட்டவனாக ஓர் அமைதியுடன் , ஓர் உறுதிப்பாட்டுடன் , ஒரு மாறாத சக்தியுடன் , எதற்கும் பின் வாங்கதவனாக விளங்குவாய் .
தியானத்தினால் நீ அடையும் நிச்சலன மனம் உண்மையிலேயே குறுகிய காலத்திற்கு உரியதே , ஏனென்றால் நீ தியானத்திலிருந்து வெளியே வந்த உடனேயே , உன்னுடைய மனதின் நிச்சலனத்திலிருந்து வெளியே வந்து விடுகிறாய் .
– ஸ்ரீ அன்னை