குழந்தாய் ,
அடிக்கடி இருண்ட காலங்கள் வருவது சாதாரணமாக நடப்பதுதான் . பொதுவாக , ஆன்மீக வாழ்வில் ஒளி நிறைந்த பகல்களும் , இருண்ட இரவுகளும் மாறிமாறி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் போதும் . ஆனால் நிலையாக சாந்தியில் இருக்கவேண்டுமானால் உள்ளத்தில் இறைவன் கொடு்க்கும் உதவிக்கு நன்றி உணர்ச்சி இருக்கவேண்டும் . நன்றி உணர்ச்சியும் மறைக்கப்பட்டுப்போகுமானால் இருண்ட காலங்கள் மிகவும் நீளும் . ஆனால் இதற்குத் துரிதமாக நல்ல பலனலிக்கக்கூடிய மருந்து ஒன்று உள்ளது ; உனது இதயத்தில் எப்பொழுதும் தூய்மை செய்யும் சுடர் எரிந்து கொண்டிருக்க வேண்டும் , முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் இருக்க வேண்டும் .
சாதனைமனப்பூர்வமாக செய்கிற எல்லோருடைய இதயத்திலும் இந்தச் சுடர் தூண்டப்படும் ;. அதை நன்றியின்மையின் சாம்பல் மூடிவிட நீ அனுமதியாதே .
– ஸ்ரீ அன்னை