ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

பூரண யோகம்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • பூரண யோகம்
ஸ்ரீ அரவிந்தர்
ஞானம்
December 20, 2021
ஸ்ரீ அரவிந்தர்
சமதை
December 22, 2021
Published by ஸ்ரீ அரவிந்தர் on December 21, 2021
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Yoga
  • யோகம்
ஸ்ரீ அரவிந்தர்

*பூரண யோகம்*

ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய யோகத்தை ‘பூரண யோகம்’ என்று குறிப்பிடுகின்றார்.

யோகத்தில் ஆன்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் கருவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சாதாரண மனிதனிடத்தில் எப்படி ஆன்மாவும், மற்ற கருவிகளும் இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே யோகியிடமும் அவை இணை பிரியாமல் இருக்கவேண்டும்.

அவற்றின் உறவுகள்தாம் மாறுகின்றன; இணைப்பு மாறுவது இல்லை. ஆம், பூரண யோகியிடத்தில் அவற்றின் உறவு முறைகள் மட்டும்தான் மாறுகின்றன. அவனிடத்தில் ஆன்மாவுக்கும், ஆன்மாவின் கருவிகளுக்கும் எந்தவித முரண்பாடும் கிடையாது.

அந்தக் கருவிகளும் ஆன்மாவைப் போல் தூய்மை அடைந்து, ஒளி பெற்று, ஆன்மாவுக்கு அனுசரணையாக விளங்குகின்றன. பூரண யோகிக்கு ஆன்மாவும் ஒரு கருவியே தவிர, முடிந்த முடிவன்று.

பூரண யோகியின் நோக்கம் ஆன்ம விடுதலையன்று. மனம், உணர்வு, உடல் ஆகிய இம்மூன்றையும் தூய்மைப்படுத்துதல் பூரண யோகத்தின் முதல் கட்டமாகும். மனத்திலிருந்து அறியாமையை நீக்க வேண்டும்; உணர்ச்சிகளை இன்ப, துன்ப நுகர்ச்சிகளிலிருந்து விடுவிக்க வேண்டும்; தமோ குணத்தை நீக்க வேண்டும்.

ஞான, பக்தி, ஹட யோகங்களால் ஒருசேரக் கிடைக்கும் ஆரம்ப பலனானது, இங்கு முதற்கட்ட அனுபவமாக அமைகிறது.

ஆன்மா தன் சுயரூபத்தை உணர வேண்டுமானால், அது ‘அகங்காரம்’ என்னும் கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

அகங்காரம் முற்றும் நீங்கிய பிறகு ஆன்மா தன் இயல்பான நிலையை அடைகின்றது. இது பூரண யோகத்தின் இரண்டாவது கட்டமாகும்.

ஆன்மா தூய்மை அடைந்த தன் கருவிகளோடு கூடி நின்று இறைவனின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றும் வகையில் இவ்வுலகத்திலிருந்து செயல்படுகின்றது. இவ்வுடலையோ, இவ்வுலகத்தையோ உதறித் தள்ளிவிட்டு அது இறைவனை அடைய விரும்புவதில்லை.

மற்ற ஆன்மாக்களும் இந்தப் பக்குவத்தை அடைய வேண்டும் என்பது பூரண யோகத்தின் முக்கிய குறிக்கோள்.

ஆகவே, பக்குவம் அடைந்த ஓர் ஆன்மா, மற்ற ஆன்மாக்களும் பக்குவம் அடைவதற்காக, இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தன்னை ஒரு பாலமாக அமைத்துக்கொண்டு செயல்படுகின்றது. இது பூரண யோகத்தின் முதற்க் கட்டமாகும்.

சாதாரண மனிதன் தன்னை உடலாகக் காண்கின்றான்; மற்றவர்களையும் உடல்களாகவே பார்க்கின்றான். ஆனால் பூரண யோகி தன்னை ஆன்மாவாகக் காண்கின்றான். மற்றவர்களையும் அவன் ஆன்மாக்களாகக் காண்கின்றான்.

அவன் இறைவனின் கருவியாக இருந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆன்ம விளக்கத்திற்குத் தொண்டு செய்கின்றான். இவ்வுலகம் பொய்மையிலிருந்து விடுபடவும், இங்கே சத்தியத்தின் ஆட்சி நிலைக்கவும் அவன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கின்றான்.

மகான் ஸ்ரீ அரவிந்தர் நமக்குத் தந்துள்ள பரிபூரண யோகத்தின் அடிப்படைக் கருத்துகள் இவை.

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother