சமதை
ஸ்ரீஅரவிந்தர் மகிழ்ச்சியையும், துன்பங்களையும், அதிர்ஷ்டத்தையும், துரதிருஷ்டத்தையும், பாராட்டுக்களையும், வசைகளையும் சமமாகவே பார்த்தார்.
அனைத்து துன்பங்களையும் அமைதியாக எதிர்க் கொண்டார்.
எப்பொழுதும் மகத்தான இறைவாக்கியமாகிய ” பிரபுவே, என் இதயத்தில் அமர்ந்திருப்பவரே என்னை நியமியும். நான் உம் ஆணைப்படி நடப்பேன்” என்பதை நினைவிலிருத்தித் தனது வணக்கத்திற்குரிய இறை வடிவைத் தியானித்தார்.
வேறு எவரையும் எரித்தழித்திருக்கக் கூடிய நெருப்பு அவரை தன்னகங்காரத்திலிருந்து விடுவித்து முன்னை விட பிரகாசமிக்கவராக ஆக்கியது.
– ஸ்ரீ அரவிந்தர்