ஒரு தூண்டுதலை அல்லது இயக்கத்தை விட்டொழிக்க அதை வெளிப்படுத்துவதுதான் சிறந்த வழி அல்லது ஒரே வழி என்றுகூட எண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன். அது தவறான கருத்து. நீ கோபத்தை வெளிப்படுத்தும்போது கோபம் மீண்டும் மீண்டும் வரும் பழக்கத்தை நீடிக்கச் செய்கிறாய், அதை உறுதிசெய்கிறாய். இயல்பிலுள்ள கோபத்தின் சக்தியை பலவீனப்படுத்தி, பின்னர் அதை முற்றிலும் விட்டொ ழிப்பதற்கு முதல் அடி செயலிலோ பேச்சிலோ அது வெளிப்படுவதற்கு இடமளிக்க மறுப்பதுதான். அதன் பிறகு அதை சிந்தனையிலிருந்தும் உணர்ச்சியிலிருந்தும் வெளியே தள்ளிவிட முயலும்போது வெற்றிக்கு அதிக வாய்ப்பிருக்கும். எல்லா தவறான இயக்கங்கள் விஷயத்திலும் இப்படியே.
– ஸ்ரீ அரவிந்தர்