அவதாரங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் சாதனை ஆரம்பித்த பொழுது தேவையான சக்திகள் எதுவும் எனக்குள் இல்லாமல் இருந்தது என்பதே. நானாக அவைகளை யோகத்தின் மூலம் வளர்த்துக் கொண்டேன். எனக்குள் ஏற்கனவே இருந்த சில சக்திகளையும் பயிற்சியின் மூலம் உயரிய நிலைக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. அவதாரங்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் என் கருத்து என்னவென்றால் அதெல்லாம் இயற்கை மீறிய அற்புதங்கள் அல்லவென்பதுதான். அப்படி வெறும் அற்புதமாக இருந்திருக்குமானால் அவர்கள் இருந்திருந்தால் எந்தப் பயனும் இருந்திருக்காது. அது இயற்கையின் ஒரு தான்தோன்றி விளையாட்டாக மட்டுமே இருந்திருக்கும். உண்மையில் அவதார புருஷன் மண்ணுலகின் நியதிதையெல்லாம் ஒப்புக் கொண்டவன். அவன் சாதாரண இயற்கையை சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ளுவான், அவன் மன்பதைக்கு வாழும் வழியைக் காட்டுபவன், உதவி செய்பவன். அப்படி இல்லையென்றால் அவன் இருந்து என்ன பயன்?
நான் எப்போதுமே மேல் மனதில் உறைந்திருக்க வில்லை என்பதை புரிந்து கொள். பிராணமய தளத்திலிருந்தும் மனோமய தளத்திலிருந்தும் படிப்படியாகத்தான் நான் அந்த உயரத்திற்கு ஏறினேன்.
– ஸ்ரீ அரவிந்தர்