இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா?
நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.
அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்?
முறை எப்போதும் ஒன்றுதான். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும்; பொதுவாக அது வெளியே பரவி இருக்கலாம்.
மேற்புறத்திலிருக்கும் எண்ண அலைகளுக்கு கீழே உங்களின் உணர்வை உள்ளேயே ஒருமுகப் படுத்துங்கள். இதயத்திலும் தலையிலும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஆழ்ந்த அமைதியைக் கொண்டு வாருங்கள். பின்னர் உங்களுக்குள் ஓர் ஆர்வத்தை உருவாக்குங்கள்.
இப்போது மேலிருந்து வரும் தெய்வீக ஆற்றலைப் பெறுவதற்கு திறவாய் இருங்கள்.
– ஸ்ரீ அன்னை