மலர்களின் மகத்துவங்கள்:
1. அல்லி – செல்வம்
2. நாகலிங்கப்பூ – செல்வவளம்
3. பூவரசம்பூ – உடல்நலம்
4. வாடாமல்லி – மரணமில்லா வாழ்வு
5. கொய்யாப்பூ – நிதானம்
6. பூசனிப்பூ – அபரிமிதம்
7. சாமந்தி – சக்தி
8. பட்டிப்பூ நித்திய கல்யாணி – முன்னேற்றம்
9. கொடிரோஸ் – சுமூகம்
10. மயிற்கொன்றை – சித்தி
11. குரோட்டன்ஸ் – தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
12. காசாம்பூ – அற்புதம்
13. அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) – இறைவனை நாடும்
14. பெட்டுனியா – உற்சாகம்
15. பாக்குமரப்பூ (கமுகு) – நிதானமான தெம்பு
16. மனோரஞ்சிதம் – தெளிவான மனம்
17. நந்தியாவட்டை – தூய்மையான மனம்
18. குவளை, மணி – அரளி மனம்
19. சூரியகாந்தி – ஒளியை நோக்கி வரும் சித்தம்
20. புகையிலைப்பூ – பகுத்தறிவு
21. மாம்பழம் – தெய்வஞானம்
22. மகிழம்பழம் – பூர்த்தி
23. செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) – மனதின் திறன்
24. பவழமல்லி பாரிஜாதம் – பக்தி ஆர்வம்
25. வெண்தாமரை – தெய்வ சித்தம்
26. செந்தாமரை – அவதாரம்
27. தூங்கு மூஞ்சி மரப்பூ – விவேகம்
28. காகிதப்பூ – பாதுகாப்பு
29. வேப்பம்பூ – ஆன்மீகச்சூழல்
30. மகிழம்பூ – பொறுமை
31. எருக்கம்பூ – தைரியம்
32. பன்னீர்ப்பூ – உணர்வில் சாந்தம்
33. விருட்சிப்பூ – உடலில் அமைதி
34. மாதுளம்பழம் – தெய்வீக அன்பு
35. அல்லி (வெள்ளை) – பூரண செல்வம்
36. அல்லி (மஞ்சள்) – குணச்செல்வம்
37. கள்ளி – தனம்
38. தென்னம்பூ – பல்வகைச் சிறப்பு
39. உணிப்பூ – உடலின் தூய்மை
40. புன்னைப்பூ – உடலில் அமைதி
41. மஞ்சள் செடிப்பூ – அமைதி
42. பண்ணைக்கீரை – மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
43. காகிதப்பூ (வெள்ளை) – பூரண பாதுகாப்பு
44. அசோகப்பூ – சோகமின்மை
45. செங்காந்தள் – சச்சரவின்மை
46. வாசனைப்புல் – உதவி
47. பாகல்பூ – இனிமை
48. பீர்க்கம்பூ – அன்பான மனம்
49. ஆவாரம்பூ, பொன்னாவரை – கவனமான மனம்
50. துலுக்க சாமந்தி – மனத்தின் தெம்பு
51. பகல்ராணி – ஒளி
52. துடைப்பம் – புதியன காணல்
53. சனல்,மஞ்சி, சணப்பு – உருவகப்படுத்தும் மனம்
54. பேரரத்தை – சொல்லறிவது
55. துலுக்க சாமந்தி (மஞ்சள்) – மனத்தின் கடுமையற்ற மனம்
56. அலரி (வெண்மை) -அமைதியான மனம் 57. சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) – தெளிவாக உணர்தல்
58. கத்தரிப்பூ – பயமின்மை
59. கோழிக் கொண்டைப்பூ – தீரம்
60. செம்பருத்தி (சிகப்பு) – பொங்கி வரும் சக்தி
61. கரிசலாங்கண்ணி (மஞ்சள்) – நுணுக்கமான முயற்சி
62. அரளி – தவறை நேர் செய்தல்
63. மந்தாரை – உணர்வின் வலு
64. அகத்திப்பூ – சித்தியின் அபரிமிதம்
65. எள்ளுப்பூ – சமரசம்
66. சுரைக்காய்ப்பூ – உணர்வின் அபரிமிதம்
67. காசித்தும்பை – உதாரண குணம்
68. அலரி (இளம் சிகப்பு) – பொய்யின் சரணாகதி
69. சம்பங்கி – புதிய சிருஷ்டி
70. மல்லிகை – தூய்மை
71. இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ – விசுவாசம்
72. பூவரசுக் கொடி – நன்றியுணர்வு
73. கொத்தமல்லிப்பூ – மென்மை
74. பருத்தி ரோஜா – தெய்வ அருள்
75. அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) – இறை நினைவு
76. குழிநாவல், சதவம் – இறைவனுக்காக
77. கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் – தெய்வீக ஆனந்தம்
78. மருக்கொழுந்து – புதிய பிறப்பு
79. பழம் கொடுக்காத மாதுளம்பூ – தெய்வீக அன்பு
80. தாழம்பூ – ஆன்மீக மனம்
81. கொடிவேலம், திவிதிவி – யோகஞானம்
82. பெருங்கள்ளி – உணர்வின் சிறப்பு
83. நாட்டு வாதாம், பாதாம்பூ – ஆன்மீக ஆர்வம் 84. துளசி – பக்தி
85. தும்பைப்பூ – உண்மை வழிபாடு
86. நாட்டு ரோஜா – சரணாகதி
87. சீமைத்துத்தி – காணிக்கை
88. சங்குப்பூ – ராதையின் உணர்வு
89. பெருங்கொன்றை, இயல்வாகை – சேவை
90. டிசம்பர்ப்பூ – விழிப்பு
91. மரமல்லி – திருஉருமாற்றம்
92. திருநீற்றுப்பச்சை – கட்டுப்பாடு
93. தமரத்தக்காய் – ஸ்தாபன ஒத்துழைப்பு
94. முருங்கைப்பூ – சுத்தமான ஸ்தாபனம்
95. இலவமரப்பூ – செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
96. நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) – இடைவிடா முன்னேற்றம்
97. நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
98. கொட்டை வாழை, கல்வாழை – சக்கரங்கள்
99. ஊமத்தை – தவம்
100. ஆரஞ்சு நிற ரோஜா – ஆர்வமிகு பக்தி
101. சிகப்பு நிற ரோஜா – தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
102. வெள்ளை நிற ரோஜா – பூரணமான தெய்வபக்தி
103. இளஞ்சிவப்பு நிற ரோஜா – சரணாகதி
– ஸ்ரீ அன்னை