வரம்பிலாக் காலத் தன்மை ஒருபுறம், வரம்பினுள் மாளும் மண்ணகம் மறுபுறம், ஒருபுறத்(து) இருந்த ஆன்மா ஒன்று கல்லினை அணுகிக் கடந்த போழ்து, பருப்பொருட் கோயில் நிலவறைப் பக்கம் காணாது போனதோர் கடவுட் சுடர்ப்பொறி விளைத்த மென்மை அழகொளி யானது மனச்சான்(று) ஏற்கா மடமைத் தளங்களில் மறைகிற மாற்றத் தாலே இக்கணம்: அந்த மாயப் பண்புடை அழலின் கணமே நிலைக்கும் கனலொளிக் கீற்றும் தெளிநிலை கொண்ட பழக்கம் வாய்ந்த வளிமண் டலத்தில் கரைய லானது.
– ஸ்ரீ அரவிந்தர்