நீ வந்த பிறகு ஒருக் காலும் உன்னைப் போகவிட மாட்டோம்; அன் பாலும் பக்தியாலும் உன்னை எங்களோடு பிணைத்து விடுவோம். அன்னையே, நீ வருகை தந்து எங்கள் மனத்திலும் உயிரிலும் உடலிலும் மிளிர்வாயாக.
வீர வழி காண்பிப்பவளே. நாங்கள் இனி உன் னைப் பிரிய மாட்டோம். தாயே, நாங்கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் உன்னை இடைவிடாமல் வழிபடவேண்டும். எங்கள் செயல்கள் அனைத் தும் அன்பும் சக்தியும் நிறைந்து தொடர்ந்து உன் பணியில் இருக்க வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள். அன்னையே, புவியில் அவதரி. இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப் படுத்து.
– ஸ்ரீ அரவிந்தர்