இந்தியா சுயநலத்தி லும் அச்சத்திலும் சிறுமையிலும் தாழ்ந்து கிடக் கிறது. எங்களை உயர்வாக்கு, எங்கள் முயற்சி களை உயர்வாக்கு. எங்கள் உள்ளங்களை விரி வாக்கு நாங்கள் எடுத்துள்ள உறுதிக்கு எங்களை உண்மையுடன் இருக்கச் செய் தாயே, சக்தியற்று, சோம்பல்மிகு அச்சத்தால் பீடிக்கப்பட்டு இருக் கும் சிறுமையை இனியும் நாங்கள் விரும்பாமல் இருப்போமாக.
– ஸ்ரீ அரவிந்தர்