நீ தோல்வியுற்றால் அதுவே உன் முடிவாகி விடும் என்று எண்ணுவாயெனில், உன் பகைவனை விட நீ வலிமையுடையவனாக இருப்பினும் போரிடச் செல்லாதே. ஏனெனில் விதியை எவரும் விலைக்கு வாங்க முடியாது, வலிமையுடையவனுக்கு அவனது வலிமை ஒரு நிரந்தரச் சொத்துமன்று. ஆனால் தோல்வி ஒருவனது முடிவன்று; அது ஒரு வாயில் அல்லது தொடக்கமேயாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்