மனிதனுள் உறையும் கடவுளாகிய கண்ண னைக் கண்டுணராதவன் கடவுளை முழுமையாக அறிந்திலன்; கண்ணனை மட்டுமே அறிந்தவன், கண்ணனைக்கூட அறிந்திலன். இதற்கு எதிர்மறை யான கூற்றும் முற்றிலும் மெய்யானதே; வண்ண மும் வனப்பும் மணமும் சிறிதும் அற்ற ஒரு சிறு மல ரினுள் உன்னால் கடவுளை முழுமையாகக் காண முடியுமென்றால், கடவுளின் பரம மெய்மையை நீ கைக்கொண்டுவிட்டாய்.
– ஸ்ரீ அரவிந்தர்