அஞ்சாமையிலும் ஆளும்திறனிலும் இவ்வுல கில் சிங்கமாயிரு, பொறுமையிலும் சேவையிலும் ஒட்டகமாயிரு, தாய்போன்று நன்மைபயப்பதிலும் அமைதியிலும் சகிப்புத் தன்மையிலும் பசுவாயிரு. தன் இரையை உண்டு களிக்கும் சிங்கத்தைப் போல் இறைவனின் உவகைகள் அனைத்தையும் துய்த்து மகிழ்; ஆனால் அந்த வளமிகு பரவசத்தை அனுப வித்து அதில் திளைக்குமாறு மனிதவினம் முழுவதை யும் அவ்வரம்பிலாப் பரப்பினுள் அழைத்து வா.
– ஸ்ரீ அரவிந்தர்