ஒட்டகத் தன்மையிலிருந்து வெளிவரும் சிங்க ஆன்மாவாக அதிமனிதனைக் கண்டார். தத்துவ ஞானி நீட்சே. ஆனால் வளமை என்னும் பசுவின் மீது நிற்கும் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங் கமே அதிமனிதனின் சின்னமாகும், அவனது வரவை முன்னறிவிக்கும் அறிகுறியாகும். மனிதவி னம் முழுவதற்கும் அடிமையாக இருக்க உன்னால் இயலாதெனில் நீ அதன் தலைவனாக இருப்பதற்குத் தகுதியற்றவனே; மனிதவினம் முழுவதற்கும் அதன் விருப்பத்திற்கேற்பத் தன் மடியிலிருந்து வழங்கிய வசிஷ்டரின் வளம்நல்கும் பசுவைப் போல் உன் இயற்கையை உன்னால் ஆக்கவியலாவிடில், நீ அதி மன சிங்கமாயிருந்து என்ன பயன்?
– ஸ்ரீ அரவிந்தர்