இறக்கும்தன்மை என்பது கிடையாது. இறவரத் தன்மையுடையவனால் மட்டுமே இறப்பதைச் செய்ய முடியும்; மரணத்துக்கு உட்பட்ட ஒருவனால் பிறக்க வும் முடியாது. இறக்கவும் முடியாது. வரம்புகட்கு உட்பட்டது எதுவுமில்லை. வரம்பற்றோனால்தான் தனக்கே வரம்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்; வரம்புகட்கு உட்பட்ட பொருளுக்குத் தொடக்கமும் முடிவும் இருப்பது இயவாது, ஏனெனில் அது தன் தொடக்கத்தையும் முடிவையும் கருத்திற்கொள்ளும் செயலே அதன் வரம்பின்மையை உறுதிப்படுத்துகிறது.
– ஸ்ரீ அரவிந்தர்