கவலையின் கூறும் கடும்போர்ப் பங்கும் ஒழுக்க வீழ்ச்சிப் பகுதி ஒன்றும் சேர்ந்து படுத்திச் சோர்ந்த உலகின் பார்வைக்(கு) எட்டாப் பாழ்கெவி களிலே கிலிதரும் மீட்சியே கிட்டிடக் கண்டவள், அயனியின் அறியா நெஞ்சத் திறுக்கும் தன்னின் பிறங்கொளித் தன்மை யினுக்கும் வேற்றுமை இடைவெளி வெகுவாய்க் காண, உதவி செய்தே உலகைக் காத்திட வந்தவள் வருந்தினள், இயலுமோ என்றே.
– ஸ்ரீ அரவிந்தர்