உலகு புரக்கும் உயர்நிலை இறையவர் விழித்தெழ இருக்கும் மேன்மைப் பொழுது. தெய்வத் திருவிளை யாடலின் வழியில் தீமை சேருமோ என்றமுன் உணர்வுடன் அகமெலாம் அறியாமை பரவிய இருள்மகள், விளக்கும் ஏற்றா வெறுமைச் சூழலில் அவளின் நிலைபேற்(று) ஆலயந் தன்னில் தன்னந் தனியே ஆன்மிக மோனத் திருவின் ஓரம் திரும்பிய வண்ணம், அசைவே இன்றி அயர்ந்த நிலையில் நெடுகிப் படர்ந்தே படுத்துக் கிடந்தாள்.
– ஸ்ரீ அரவிந்தர்