சோர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி?
ஒ! அதற்கு ஒரு மிக எளிய வழி இருக்கிறது. பொது வாக சோர்வு பிராணனில் ஏற்படுகிறது, ஒருவன் தன்னுடைய உணர்வைப் பிராணனில் வைத்திருப்ப தனால் தான், அவன் அங்கே இருப்பதனால் தான் சோர்வுக்கு ஆட்படுகிறான். செய்ய வேண்டியது பிரா ணனிலிருந்து வெளியேறி அதைவிட ஆழமான உணர் வினுள் புகுதல் ஒன்றுதான். உயர் மனத்திற்கு, பிரகா சமான அந்த மனத்திற்கு, மேலான சிந்தனைகளுக்குக் கூட சோர்வை விரட்டியடிக்கும் ஆற்றல் உள்ளது. சிந்தனையின் உயர் பிரதேசங்களுக்குச் சென்றாலே போதும், பொதுவாக சோர்வு மறைந்துவிடும். எப்படி இருப்பினும், ஒருவன் சைத்திய புருஷனில் அடைக்கலம் தேடினால், சோர்வுக்கே இடமிருக்காது.
– ஸ்ரீ அரவிந்தர்